இலங்கையின் முக்கிய அரசாங்க திட்டங்களுக்கு நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்குவதற்கு உலக வங்கி உறுதிபூண்டுள்ளதாக உலக வங்கியின் தெற்காசியாவிற்கான உப தலைவர் மார்ட்டின் ரைசர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிற்கும் உலக வங்கியின் பிரதிநிதிகளுக்கும் இடையில் இன்று ( 21) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.

இக்கலந்துரையாடலின் போதுஇ நிதி மற்றும் தொழில்நுட்ப ஆதரவை வழங்குவதற்கு ஒருமித்த கருத்து எட்டப்பட்டது
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட திட்டங்கள், “தூய்மையான இலங்கை” திட்டம், வறுமை கிராமப்புறங்களில் நிவாரணம், மற்றும் டிஜிட்டல் மாற்றம் திட்டங்கள்இ கல்விஇ எரிசக்தி, டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் வடக்கு அபிவிருத்தி ஆகிய துறைகளில்
புதிய திட்டங்கள் சாத்தியமான ஆதரவிற்காக விவாதிக்கப்பட்டன.
உலக வங்கியின் மார்ட்டின் ரைசர், இலங்கைக்கான அங்கீகரிக்கப்பட்ட நிதி உதவியை உரிய நேரத்தில் வழங்குவதை தனது அமைப்பு உறுதி செய்யும் என்று உறுதியளித்தார்.
கல்வித்துறையை அபிவிருத்தி செய்வதன் மூலம் கிராமிய வறுமையை போக்க முடியும் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க வலியுறுத்தினார்.
அரசாங்கத்தின் தற்போதைய கல்விச் சீர்திருத்தங்களுக்கு உலக வங்கியின் பிரதிநிதிகள் ஆதரவளிக்குமாறு அழைப்பு விடுத்த அவர், பொதுப்போக்குவரத்துத் துறையின் வளர்ச்சிக்கு உதவி கோரினார்.
இலங்கையின் தொழிலாளர் படையில் 28% விவசாயத்தில் ஈடுபட்டுள்ள போதிலும்இ மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) இத்துறை சுமார் 6% மட்டுமே பங்களிக்கிறது. இந்த பங்களிப்பு போதுமானதாக இல்லை என்றும் மேலும் முன்னேற்றம் தேவை என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
நாட்டின் அதிக மக்கள் தொகை அடர்த்தியைக் கருத்தில் கொண்டுஇ மக்களுக்கு அத்தியாவசிய வசதிகளை வழங்குவதற்கான அரசாங்கத்தின் திட்டங்களை ஜனாதிபதி விளக்கினார்.
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கான அரசாங்கத்தின் உத்திகள் மற்றும் 2025 இல் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் புதிய திட்டங்களை செயல்படுத்துவது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களின் விரைவான அபிவிருத்திக்கான திட்டங்களையும் வெளிப்படுத்திய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க, துறைமுக அபிவிருத்தி முயற்சிகளை துரிதப்படுத்துவதில் அரசாங்கம் கவனம் செலுத்துவதாகவும் தெரிவித்தார்.
வடமாகாணத்தில் மூன்று முதலீட்டு வலயங்களை ஸ்தாபிக்கும் திட்டத்துடன், வடக்கு அபிவிருத்தி தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது.
வடக்கின் சுற்றுலாவை மேம்படுத்தவும், நீர் வசதிகளை மேம்படுத்தவும், வடமாகாண மக்களின் சமூகப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும், அவர்களின் கலாச்சார அடையாளத்தைப் பேணவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
இக்கலந்துரையாடலில் தொழிலாளர் அமைச்சரும்இ பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க; நேபாளம், மாலத்தீவு மற்றும் இலங்கைக்கான உலக வங்கியின் பிராந்திய நாட்டு இயக்குநர் டேவிட் சிஸ்லென், உலக வங்கி மற்றும் சர்வதேச நிதிக் கூட்டுத்தாபனம் (IFC) இலங்கை மற்றும் மாலத்தீவுகளுக்கான நாட்டு மேலாளர், கெவோர்க் சர்க்சியன் மற்றும் உப ஜனாதிபதியின் விசேட உதவியாளர் கிஷான் அபேகுணவர்தன ஆகியோர் கலந்துக்கொண்டனர்.