ஈழத்தமிழர்களின் உரித்துகளை நிலைநாட்ட சமஷ்டி முறை தேவை

Date:

சமஷ்டி முறையிலான அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வொன்றே காலத் தேவையொன்றே ஈழத்தமிழர்களின் அரசியல் உரித்துகளை நிலைநாட்ட தேவை என
பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், ஐரோப்பிய ஒன்றியத்தினரிடம் வலியுறுத்தியுள்ளர்.

பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரனுக்கும், ஐரோப்பிய ஒன்றியத்
தேர்தல் கண்காணிப்புக் குழுவின் தலைமை கண்காணிப்பாளர் நாச்சோ சான்செஸ் அமோர், ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவர் கார்மன் மொறேனோ உள்ளிட்ட குழுவினருக்கும், இடையிலான சந்திப்பொன்று வெள்ளிக்கிழமை (17) கொழும்பில் நடைபெற்றது.

குறித்த சந்திப்பின்போது, கடந்த ஜனாதிபதித் தேர்தல் குறித்த கருத்துப் பகிர்வுகள் இடம்பெற்ற சமநேரத்தில், ஈழத்தமிழர்களின் அரசியல் உரித்துக் கோரும்
பயணத்தின் அடுத்தகட்ட நகர்வுகள் தொடர்பிலும்இ தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகள் குறித்து கோரப்பட்ட போது, உள்ளக சுய நிர்ணய உரிமையின்
அடிப்படையில் இணைந்த வடக்கு – கிழக்குக்கு சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வுடன் கூடிய தீர்வு என்பதுதான் சர்வதேச மட்டத்தில் இலங்கை அரசும்
சேர்ந்து ஒஸ்லோவில் இணங்கிக் கொண்ட இறுதி விடயம் என்ற அடிப்படையில் 13ஆவது திருத்தச் சட்டத்துக்கும் சமஸ்டி முறைமைக்கும் இடையிலான
நடைமுறை வேறுபாடுகள், 13வது திருத்தச் சட்டத்தை புறந்தள்ளி சமஸ்டி முறையிலான அதிகாரப் பகிர்வை வழங்க வேண்டியதன் நியாயப்பாடுகள், கனடா,
சுவிஸ், பெல்ஜியம் போன்ற நாடுகளில் பின்பற்றப்படும் சமஷ்டி முறைமையையும், இந்திய மாநில சுயாட்சி முறைமையையும் அடிப்படையாகக் கொண்டு
இலங்கையில் சமஷ்டியை நடைமுறைப்படுத்த வேண்டியுள்ள யதார்த்தப் புறநிலைகள் குறித்து பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன், ஐரோப்பிய
ஒன்றியத்தினரிடம் தெரிவித்தார்.

இதன்போது தமது குழுவினால் தயாரிக்கப்பட்ட ஜனாதிபதித் தேர்தல் கண்காணிப்பு அறிக்கையின் பிரதி ஒன்றை, தமிழர் பிரதிநிதிகள் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரனிடம் குழுவின் தலைமை கண்காணிப்பாளர் கையளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ஜகத் விதானகேயின் மகனுக்கு விளக்கமறியல்

சட்டவிரோதமாக பொருத்தப்பட்ட வாகனத்தை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஐக்கிய மக்கள்...

பலத்த காற்று தொடர்பில் எச்சரிக்கை

பலத்த காற்று தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிவிப்பை விடுத்துள்ளது.  மேல், சப்ரகமுவ,...

சட்டமா அதிபர் திணைக்களத்தில் புதிய நியமனம்

சட்டமா அதிபர் திணைக்களத்தின் குற்றவியல் பிரிவின் தலைவராக சொலிசிட்டர் ஜெனரல் விராஜ்...

வத்தளையில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் பலி

வத்தளை, ஹெகித்த, அல்விஸ்வத்த பகுதியில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். குறித்த...