இலங்கையில் அதானி முதலீடுகளை அனுமதிக்க போவது இல்லை என்று தெரிவித்து வந்திருந்த அநுர அரசு அதானி நிறுவனம் கொழும்பு துறைமுகத்தில் தமது செயற்பாடுகளை ஆரம்பிப்பது மிக முக்கியம் ஆகும் என்று குறிப்பிட்டுள்ளார்.
2025ம் ஆண்டின் நடு பகுதி ஆகும் போது கொழும்பு துறைமுகத்தில் மேலும் 2 புதிய முனையங்கள் தமது செயற்பாடுகளை ஆரம்பிக்கும் என்று எதிர்பாக்கின்றோம்.
அதன் ஊடாக நாட்டின் பொருளாதாரத்திற்கு பாரிய பங்களிப்பை பெற்று கொடுக்க எதிர்பார்க்கின்றோம் என்று அரச அமைச்சர் பிமல் ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.
அதானி நிறுவனத்தின் முதலீடு தொடர்பாக இலங்கையிலுள்ள பிரச்சினை ஆனது மன்னார் காற்றலை திட்டம் ஆகும்.
மேலும் இது தொடர்பாக அரசாங்கத்தின் நிலைப்பாட்டினை தெளிவுபடுத்தி உள்ளோம். ஜனாதிபதி அது தொடர்பில் தெளிவுபடுத்தி உள்ளதுடன் நீதிமன்றத்துக்கும் அறிக்கையிட்டு உள்ளோம். அந்த திட்டம் இலங்கைக்கு பாதகம் ஆனது.
அதானி குழுமம் அபிவிருத்தி செய்யும் கொழும்பு மேற்கு முனையம் குறித்த விவாகரத்தில் அவர்களிற்கு நிதியையளிக்கும் அமெரிக்க நிறுவனத்துடன் ஆன ஒப்பந்தத்திலிருந்து விலகி உள்ளனர். அவர்களது நிதியில் இதை செய்வதாக தெரிவித்துள்ளனர்.
ஆதலால் அதானி நிறுவனம் தமது செயற்பாடுகளினை ஆரம்பிப்பது மிக முக்கியம் ஆகும். கொழும்பு துறைமுகத்தின் பெரும்பான்மை ஆன பகுதி துறைமுக அதிகார சபைக்கு உட்பட்டது என்றும் ஆனால் வேறு சில நிறுவனங்களும் தற்பொழுது பணிபுரிகின்றன.