இலங்கையின் ஊழல் எதிர்ப்பு திட்டங்களுக்கு ஆதரவு ; அமெரிக்கா

Date:

நாட்டிலிருந்து கொண்டு செல்லப்பட்ட பணத்தை மீண்டும் நாட்டுக்கு கொண்டுவருவது தொடர்பில் அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களுக்கு ஆதரவு வழங்க தயாராகவுள்ளதாக தெற்கு, மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் டொனல்ட் லூ தெரிவித்துள்ளார்

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவை நேற்று சந்தித்தபோதே அவர் இதனை கூறியுள்ளார்.

அரசாங்கத்தால் கொண்டுவரப்படும் ஊழல் – ஒழிப்பு வேலைத்திட்டங்களுக்கு தேவையான எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஆதரவு வழங்க தயாராகவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் பாதுகாப்பு, பொருளாதாரம் ஆகியவற்றை கட்டியெழுப்புவதற்காக நிதி, தொழிநுட்ப ஒத்துழைப்புகளை பெற்றுக்கொடுக்க அமெரிக்கா தயாராகவுள்ளதாக அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் கூறியதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அரசியல், பொருளாதாரம், சமூக காரணிகள் தொடர்பான முன்னுரிமையை அறிந்து புதிய அரசாங்கம் முன்வைக்கும் வேலைத்திட்டங்களுக்கு அமெரிக்கா பாராட்டு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

பட்டலந்த அறிக்கை விவாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகும்

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை மீதான பாராளுமன்ற விவாதம் ஏப்ரல் மாதம் 10...

துப்பாக்கிகளுடன் 5 பேர் கைது

அஹுங்கல்ல, பல்லம, மாபலகம, மஹநான்னேரிய மற்றும் அம்பாறை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த...

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை, பொலன்னறுவை, நுவரெலியா மற்றும்...

100 கிராம் ஹெராயினுடன் சந்தேக நபர் ஒருவர் கைது

21 இலட்சம் ரூபா பெறுமதியான சுமார் 100 கிராம் ஹெராயினுடன் சந்தேக...