கற்பிட்டி பாலவியா பிரதான வீதியில் நேற்று 13ம் திகதி இரவு 7 மணியளவில் ஏற்பட்ட விபத்தில் இரண்டு இளைஞர்கள் பலியானதுடன் ஒரு இளைஞர் காயம் அடைந்து உள்ளதாக நுரைச்சோலை பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
நுரைச்சோலையிலிருந்து முந்தலம் நோக்கி சென்ற பாரவூர்த்தியொன்று அந்த வழியாக சென்ற மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதியதினால் இவ் விபத்து ஏற்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிளில் பயணித்த 3 இளைஞர்களில் இரண்டு பேர் படுகாயம் அடைந்து புத்தளம் ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேளையில் இவ் இரண்டு பேரும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ் விபத்தில் ஒரு பிள்ளையின் தந்தை ஆன நிபுன் பிரிமால் எனும் 29 வயதுடைய நபரும் தசுன் மதுசங்க எனும் 28 வயதுடைய நபரும் பலியானதாக தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.