இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், தமது மைதானத்தில் நடைபெற்ற அஸ்தன் வில்லாவுடனான போட்டியை 2-2 என்ற கோல் கணக்கில் ஆர்சனல் சமப்படுத்தியது.

ஆர்சனல் சார்பாக கப்ரியல் மார்டினெல்லி, கை ஹவேர்ட்ஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். வில்லா சார்பாக யூரி டெலிமான்ஸ், ஒலி வட்கின்ஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
பிறீமியர் லீக் புள்ளிகள் தரவரிசையில் லிவர்பூல் 50 புள்ளிகளுடன் முதலாமிடத்திலும் 44 புள்ளிகளுடன் ஆர்சனல் இரண்டாமிடத்திலும், 41 புள்ளிகளுடன் நொட்டிங்ஹாம் பொரெஸ்ட் மூன்றாமிடத்திலும், காணப்படுகின்றன.