சபாநாயகர் அசோக ரன்வலவுக்கு எதிரான அவநம்பிக்கை பிரேரணையை கொண்டு வருவது குறித்து எதிர்கட்சிகள் அவதானம் செலுத்தி வருகின்றன.
அதற்கேற்ப, இன்று 13ம் திகதி இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் சாகர காரியவசம், சபாநாயகர் ஆரம்பத்தில் கலாநிதி பட்டம், பல பட்டங்களை பெற்று உள்ளதாக காட்டி மக்களை ஏமாற்றி உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இவ் வேளை, ஆளுங்கட்சியில் உள்ள பல நாடாளுமன்ற உறுப்பினர்களின் பட்டங்கள் தொடர்பாக சிக்கல் ஏற்பட்டு உள்ளதாக முன்னாள் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.
ஊடகங்களுக்கு இன்று 12ம் திகதி கருத்து தெரிவித்த அவர், சபாநாயகர் நாட்டு மக்களை ஏமாற்றி உள்ளதாக தெரிவித்துள்ளார்.