யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் அனுராதபுரத்தின் ரம்பேவ பகுதியில் போக்குவரத்து பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகள் குழுவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் அவரை கைது செய்து விசாரணைகளை முன்னெடுக்குமாறு அனுராதபுர நீதிமன்ற நீதவான்
உத்தரவிட்டுள்ளார்.
சம்பவம்தொடர்பில், நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டமை தொடர்பில் அர்ச்சுனா இராமநாதனை கைது செய்து, சட்டப் பிரகாரம் நடவடிக்கை எடுக்குமாறும், விசாரணைகள் தொடர்பான மேலதிக விபரங்களை, பெப்ரவரி 3 ஆம் திகதியன்று நீதிமன்றத்தில் அறிவிக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.