அநுர அரசு மொட்டு கட்சிக்கு பயந்து விட்டது என சாகர காரியவசம் பெருமிதம்!

Date:

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு பயந்துவிட்டது என்பதையே கைது சம்பவம் எடுத்துக்காட்டுகின்றது என்று மொட்டு கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே சாகர காரியவசம் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ரேணுக பெரேராவின் கைது சம்பவம், நாம் எதை செய்தாலும் மௌனமாக இருங்கள் என அரிசயல் எதிராளிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை ஆகும்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு, இந்த அரசாங்கம் பயந்து விட்டது என்பதையும் இது எடுத்துக்காட்டுகின்றது. எமது கட்சி மீது இவ்வளவு பயம் இருப்பது மகிழ்ச்சியளிக்கின்றது.1989 இல் ஜே.வி.பியினர் இனவாதத்தை பரப்பும்போது அதற்கு எதிராக போராடிய விஜேகுமாரதுங்கவின் கட்சியில் இருந்தவர் தான் ரேணுக பெரேரா.

ரேணுக பெரேரா இனவாதி அல்ல. அவர் இனவாதத்துக்கு எதிராக செயற்பட்ட நபர். இன ஐக்கியத்துக்காக போராடியவர். அப்படியான ஒருவரை கைது செய்துள்ளமை அரசாங்க ஒடுக்குமுறையாகும்.” என கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

துப்பாக்கிகளுடன் 5 பேர் கைது

அஹுங்கல்ல, பல்லம, மாபலகம, மஹநான்னேரிய மற்றும் அம்பாறை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த...

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை, பொலன்னறுவை, நுவரெலியா மற்றும்...

100 கிராம் ஹெராயினுடன் சந்தேக நபர் ஒருவர் கைது

21 இலட்சம் ரூபா பெறுமதியான சுமார் 100 கிராம் ஹெராயினுடன் சந்தேக...

தேசிய பாதுகாப்பை உடனடியாக உறுதி செய்யுங்கள்

தேசிய பாதுகாப்பு, தற்போது இணக்கப்பாடு காணப்பட்டுள்ள சர்வதேச நாணய நிதிய உடன்படிக்கையை...