அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு

Date:

அடுத்த ஆண்டு நாட்டின் சுகாதார கட்டமைப்பில் அத்தியாவசிய மருந்துகளுக்குத் தட்டுப்பாடு ஏற்படக்கூடிய வாய்ப்பு உள்ளதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது

சரியான கொள்முதல் நடைமுறையை பின்பற்றாததன் காரணமாக இந்த நிலைமை ஏற்படக்கூடும் என தெரிவிக்கப்படுகின்றது.

வழமையாக புதிய வருடமொன்று ஆரம்பமாகும்போது, சுகாதார அமைச்சினால் குறித்த வருடத்துக்கான மருந்துகளுக்கான மதிப்பீட்டறிக்கை தயாரிக்கப்பட்டு கொள்வனவுக்கான வேண்டுகோள் விடுக்கப்பட வேண்டும்.

எவ்வாறாயினும், கடந்த அரசாங்கத்தின் பலவீனம் மற்றும் கடந்த காலங்களில் சுகாதாரத் துறையின் அதிகாரிகள் பலர் கைது செய்யப்பட்டமையினால் தற்போது, மருந்து ஒழுங்குபடுத்தல், கொள்வனவு மற்றும் விநியோகம் ஆகிய செயற்பாடுகளில் பாரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

இதன்காரணமாக, மருத்துவ விநியோகப்பிரிவின் தரவுகளுக்கமைய, அடுத்த ஆண்டில் பாரியளவில் மருந்து தட்டுப்பாடு ஏற்படக்கூடிய நிலை அவதானிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, இன்சுலின், புற்றுநோய்க்கான மருந்துகள் மற்றும் சில உயிர்காப்பு மருந்துகளுக்கும் தட்டுப்பாடு நிலவுகிறது.

எனவே, அரசாங்கம் உரிய கொள்வனவு நடைமுறைகளைப் பின்பற்றி பாரிய பற்றாக்குறைகள் ஏற்படுவதனை தவிர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பினது செயலாளர் வைத்திய நிபுணர் சமல் சஞ்சீவ தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

கால அவகாசம் நிறைவு

அஸ்வெசும நலன்புரி உதவித் திட்டத்திற்கான மேல்முறையீட்டு காலம் நாளை (21) நிறைவடையவுள்ளது. அஸ்வெசும...

பிறப்பு அத்தாட்சிப் பத்திரத்துக்கு தந்தையின் பெயர் அவசியமில்லை

குழந்தை பிறந்தவுடன் பிறப்பு அத்தாட்சிப்பத்திரம் பதியும்போது பெற்றோர் திருமணம் முடித்துள்ளார்களா என்பது...

ஜகத் விதானகேயின் மகனுக்கு விளக்கமறியல்

சட்டவிரோதமாக பொருத்தப்பட்ட வாகனத்தை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஐக்கிய மக்கள்...

பலத்த காற்று தொடர்பில் எச்சரிக்கை

பலத்த காற்று தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிவிப்பை விடுத்துள்ளது.  மேல், சப்ரகமுவ,...