அதிவேக நெடுஞ்சாலை விபத்தில் ஒருவர் பலி

Date:

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்று சீமெந்து ஏற்றிச் சென்ற லொறியுடன் மோதியதில்
ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 13 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று (17) அதிகாலை 5 மணியளவில் இடம்பெற்ற இவ்விபத்தில் சுற்றுலா பஸ்ஸின் சாரதி உயிரிழந்துள்ளதோடு விபத்தில் காயமடைந்த நால்வர்
தங்காலை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்களில் தங்காலை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் மூன்று வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மற்றும் சுற்றுலா வழிகாட்டி ஒருவரும் உள்ளடங்குவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விபத்துக்குள்ளான பஸ்ஸில் 12 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பயணித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் சிறிதளவு காயமடைந்த
சுற்றுலாப் பயணிகள் 9 பேர் பெலியத்த வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களும் மேலதிக சிகிச்சைகளுக்காக
தங்காலை ஆதார வைத்தியசாலைக்கு அழைத்து வரப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த சாரதியின் சடலம் பெலியத்த வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

பாராளுமன்ற ஒன்றியத்தின் உறுப்பினர்களுக்கு இரு நாள் வதிவிட செயலமர்வு

திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் உறுப்பினர்களுக்கு இரண்டு நாள் வதிவிட...

வானிலை முன்னறிவிப்பு

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா மாவட்டங்களிலும்...

பாராளுமன்றில் ஜீவன் சீற்றம்

சௌமிய மூர்த்தி தொண்டமானின் பெயரில் ஞாபகார்த்த மண்டபம் உருவாக்கியது சாபக்கேடு ஆளும்...

அமெரிக்காவில் பனிப்புயல் : 100 மில்லியன் மக்கள் பாதிப்பு

அமெரிக்கா முழுவதும் 100 மில்லியன் மக்கள் பேரழிவு தரும் குளிர்கால வானிலையை...