தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பின்னதுவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தினை சேர்ந்த இரண்டு சிறுமிகள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இவ் விபத்து சம்பவம் நேற்று முன்தினம் 11ம் திகதி இரவு இடம்பெற்று உள்ளது.
இந்த விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
கொட்டாவை, பாலட்டுவ இடையே பயணித்த காரொன்று சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை கலக்கத்தினால் முன்னால் சென்ற லொறியின் பின்புறம் மோதியதினால் இவ் விபத்து ஏற்பட்டு உள்ளது.
விபத்தின் போது காரில் பயணித்த தாய், தந்தை, இரண்டு மகள்களும் படுகாயம் அடைந்துள்ள வேளையில் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்பு 10 வயதுடைய மகள் உயிரிழந்து உள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மற்றைய சிறுமி அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த வேளையில் உயிரிழந்து இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளினை மேற்கொண்டு வருகின்றனர்.